அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் திருக்கோயில்

முதலாம் இராசேந்திர சோழன் கட்டிய கோவில்! அகத்தியர் வழிபட்ட ஸ்தலம்!! Temple Vlog 2024

பொன்னேரி| அகத்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு| கும்பமுனி மங்கலம்| Ponneri Agastheeswarar Temple History in Tamil

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் பொன்னேரி, கும்பமுனி மங்களம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்மை வலம் கொண்ட அகத்தீஸ்வரர் திருக்கோவில் வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

அகத்திய முனி, அன்னை பார்வதி தேவிக்கு ஏற்பட்ட கடும் தோஷம் நீங்க பார்வதியை கும்பமுனி மங்களத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானை 11 அமாவாசைகள் வேண்டி விரதம் மேற்கொண்டு, அங்கு சிவபெருமானை வேண்டி தவமிருக்கும் அனைத்து தேவர்கள், முனிவர்கள் ,சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து, சிவலிங்கத்தை பூஜை செய்தால் உங்கள் தோஷம் விலகி ஆனந்தம் ஏற்படும் என்ற பரிகாரத்தை கூறினார் அகத்திய முனிவர். முனிவரின் ஆலோசனைப்படி, பார்வதி தேவி சிவலிங்க பூஜைகள் மற்றும் அன்னதானம் ஆகிய்வற்றை 11 அமாவாசைகள் செய்து முடித்தார். மனம் மகிழ்ந்த எம்பெருமான், அன்னை பார்வதி தேவிக்கு காட்சி அளித்து அவரது தோஷத்தை நீக்கினார் சிவபெருமான் .

 

அன்னை பார்வதி தனது தோஷம் நீங்கி, சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைத்ததால், பார்வதி தேவி ஆனந்தம் அடைந்தாள். இதனால் இங்கு ஆனந்தவல்லி என்று பெயர் பெற்றாள். மேலும் தன உள்ளத்தில் சிவபெருமானை என்றும் தியானிப்பதால் இங்குள்ள சிவபெருமான் அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயரை பெற்றார் என்று புராணங்கள் கூறுகிறது. பின்னாளில் இதை அறிந்த சோழ மன்னன் இங்கேயே கோவில் நிறுவி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் என்ற பெயரை இக்கோவிலுக்கு சூட்டினான். சிவபெருமானுக்கு அன்னை பார்வதி தேவி இந்த ஆலயத்தில் பூஜை செய்ததால் இங்கு நடைபெறும்பூஜையை சிவசக்தி பூஜை என்று அழைக்கிறார்கள்.

அகத்தீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றும் சிவசக்தி பூஜை வெகுச் சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் இந்த சிவசக்தி பூஜையில் கலந்து கொண்டு சிவன் மற்றும் சக்தியை வழிப்பட்டால், அனைத்து தோஷங்கள் விலகி வாழ்வில் சிறப்படைவார்கள் என்று நம்பப்படுகிறது.