தமிழகத்தில் லாக்டவுன்|பத்திரப்பதிவுத் துறை வருவாய் இழப்பு எத்தனை கோடி?
தமிழக அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் முக்கிய துறைகளில் டாஸ்மாக்கு அடுத்தபடியாக இருப்பது
பத்திரப்பதிவுத் துறை. தற்போது நிலவும் முழு பொது முடக்கத்தால், அந்தத் துறையின் பணிகளும் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. சார்பதிவாளா் அலுவலகங்களில் ஆவணப் பதிவுகள் மூலமாக மாதத்துக்கு ரூ.1000 கோடி வரை வருவாய் ஈட்டப்பட்டு வந்தது.
14 நாள்கள் முழு லாக்டவுன் காரணமாக, சுமார் ரூ.500 கோடி வரை வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது. முழு பொது முடக்கம் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், அரசின் வருவாய் இழப்பு கூடுதலாக ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக பதிவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.