2025 கோட்டைமாரியம்மன் மாசி திருவிழா நடைபெறாது!! Dindigul Kottai Mariamman 2025!
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளதால் இந்த வருடம் மாசி பெரு திருவிழா நடைபெறாது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
வருகின்ற 26.01.2025 திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பாலாயம் நடைபெற உள்ளது.
கோவில் திருப்பணிகள் முடியும் வரை கோட்டை மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் மரத்தினால் செய்யப்பட்ட அம்மன் பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!