2025 மகா சிவராத்திரி அன்று செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!

2025 மகா சிவராத்திரி அன்று செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!| 2025 Do’s & Don’ts during Maha Sivarathri!

2025 மகா சிவராத்திரி அன்று செய்ய வேண்டியவைகள் :

 

1. உங்கள் உடல்நிலை நன்றாக இருப்பின் அன்றைய சிவராத்திரி தினம் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் இருக்கலாம். அதுவே வயதானவர்கள், உடல்நல பிரச்சனை கொண்டவர்கள் பால், பழம் (அ) உப்பு சேர்க்கப்படாத உணவை சாப்பிட்டு உங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

2. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி திதியில் கடைப்பிடிக்கக்கூடிய மகா சிவராத்திரி நாளன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து இந்த விரதத்தைத் தொடங்க வேண்டும்.

3. சிவ புராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம் படிக்கலாம். அதோடு தேவாரம், திருவாசகம் மற்றும் சிவபெருமானுடைய மந்திரங்கள் நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருத்தல் நல்லது.

4. சிவாய நம ஓம், சிவாய நம் ஓம் என சிவராத்திரி தினத்தன்று ஒரே ஒருமுறை சொன்னால் போதும் பல நூறு முறை சொன்னதற்கு பலன் உங்களுக்கு கிடைக்கும்.

5. பால், தயிர், நெய், தேன், ஆகியவற்றால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு நீங்கள் வாங்கி தரலாம்.

6. மகா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை உங்களுக்கு சேர்க்கும். நம் பாவங்களைப் போக்கும்.

7. மஹா சிவராத்திரி நாளன்று உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையுடன் இருந்தால் மட்டுமே சிவராத்திரி தின விரதம் முழு பலனை நமக்கு தரும். சிவ பெருமானின் முழுமையான அருள் நமக்கு கிட்டும்,

2025 மகா சிவராத்திரி அன்று செய்யக்கூடாதவை:

1. மஹா சிவராத்திரி தினத்தில் மாமிசம், துரித உணவுகளை கண்டிப்பாக நாம் உண்ணக்கூடாது. மது அருந்துதல் கூடாது. கண் விழித்திருப்பதற்காக சீட்டு ஆடுவது, மொபைல் போனில் விளையாடுவது, கேளிக்கையில் ஈடுபடுவது அறவே கூடாது!

2. புனிதமான மகா சிவராத்திரி தினத்தில் பொய், புறம் பேசுதல், பிறரை திட்டுவது, அடிப்பது, சுக போகங்கள், தீய எண்ணங்கள், சிந்தனைகள் அனுபவிப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3.இரவில் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, பகலில் தூங்கக்கூடாது. சிவாலயங்களுக்குச் செல்லக்கூடிய பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானத்தை வாங்கி உண்ணக் கூடாது.

4. மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத மிக முக்கியமான தவறு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு அளிப்பது. மனிதர்களுக்கு மிக முக்கியமானது இரண்டு விஷயம். உணவு, நல்ல உறக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த மஹா சிவராத்திரி நாளின் நோக்கம் ஆகும்!.