2024 பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி எப்போது

2024 பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி எப்போது தெரியுமா? Pillayar Patti Karpaga Vinayagar 2024

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழா அழைப்பிதழ் 2024 | Pillayar Patti Vinayagar chaturthi 2024 invitation

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் கோயில்
ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, ஸ்ரீ திருவீசர் உடனாகிய சிவகாமி அம்மன்,
ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமானுக்கு சதுர்த்திப் பெருவிழா அழைப்பிதழ்
(28.08.2024 முதல் 07.09.2024 )

பேரன்புடையீர்.
வரலாற்றுப் புகழ்மிக்க பிள்ளையார்பட்டி நகரக் கோயில் அருள்மிகு கற்பக விநாயகப் பெருமானுக்கு நிகழும் மங்களகரமான ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 12-ஆம் நாள் (28.08.2024) புதன்கிழமைமுதல் ஆவணி மாதம் 22-ஆம் நாள் (07.09.2024) சனிக்கிழமை வரை நடைபெறும் சதுர்த்திப் பெருவிழாவிற்குப் பக்தகோடிப் பெருமக்கள் வருகை தந்து கற்பக விநாயகப் பெருமானைத் தரிசித்து எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்றுய்ய அன்புடன் வேண்டுகிறோம்.