2024 திருச்செந்தூர் ஆவணி திருவிழா - 01

2024 திருச்செந்தூர் ஆவணி திருவிழா எப்போது? 2024 Tiruchendur Avani Festival Date?

2024 திருச்செந்தூர் ஆவணி திருவிழா நாள் & தேதி எப்போது தெரியுமா? |2024 Thiruchendur Avani Festival Date &Time?

அருள்மிகு ஸ்ரீ சுப்ரமண்யசுவாமி திருக்கோவில் ஆவணித்திருவிழா-2024

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2024 1ஆம் திருநாள் :

ஆவணி – 8ம் தேதி ஆகஸ்ட் 24-08-2024 சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அதிகாலை: 5:00 மணிக்குமேல் 5.30 மணிக்குள் ஆவணி திருவிழா கொடியேற்றப்படும். மாலையில்
திருக்கோயிலிலிருந்து சிறிய தங்கச்சப்பரத்தில் அருள்மிகு ஸ்ரீ அப்பா் சுவாமிகள் எழுந்தருளி திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் பெரிய பல்லக்கில் அருள்மிகு ஸ்ரீ பெலி நாயகா் அஸ்திரத்தேவருடன் அருள்மிகு ஸ்ரீ ஜெயந்தி நாதர் எழுந்தருளி 9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

திருச்செந்தூர்ஆவணித் திருவிழா 2024 – 2ஆம் திருநாள்

ஆவணி – 9ம் தேதி
ஆகஸ்டு 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை

பகல்:-
திருக்கோவிலிலிருந்து முஷிக வாகனத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகரும் சிங்ககேடயச் சப்பரத்தில்
அருள்தரும் வள்ளி அம்பாள் தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான்
சிறிய பல்லாக்கு தனி வாகனத்தில் அருள்தரும் வள்ளி அம்பாள்
எழுந்தருளி எட்டு திருவீதிகளில் உலா வந்து பின்னர் 2ஆம் திருநாள் மண்டபத்தில் சேர்தல்

2ஆம் திருநாள் இரவு :-
முஷிக வாகனத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் சுவாமி
அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான்
சிங்ககேடயச் சப்பரத்திலும் பெரியகேடய தனிச்சப்பரத்தில்
அருள்தரும் வள்ளி அம்பாள் எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2024 3ஆம் திருநாள் :

ஆவணி – 10ம் தேதி
ஆகஸ்டு 26-08-2024 திங்கள் கிழமை காலை
அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் பூங்கேடயச் சப்பரத்திலும் தனிக்கேடயச் சப்பரத்தில் அருள்தரும் வள்ளி அம்பாள்
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

இரவு
அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும் அருள்தரும் வள்ளி அம்பாள் தனி அன்னபறவை வாகனத்தில் எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2024 4ஆம் திருநாள் :

ஆவணி – 11ம் தேதி ஆகஸ்டு
27-08-2024 செவ்வாய்க்கிழமை

காலை
அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும் அன்னபறவை வாகனத்தில் அருள்தரும் வள்ளி அம்பாள்
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்

இரவு
அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் வெள்ளி யானை வாகனத்திலும் வெள்ளிசரப வாகனத்தில் அருள்தரும் வள்ளி அம்பாள் எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2024 5ஆம் திருநாள் :
ஆவணி – 12ம் தேதி
ஆகஸ்டு 28-09-2024 புதன்கிழமை

காலை
அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் வெள்ளி யானை வாகனத்திலும் சரப வாகனத்தில்
அருள்தரும் வள்ளி அம்பாள் எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து
மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

ஐந்தாம் திருநாளில் மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு #குடைவரைவாயில்தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அருள்தரும் வள்ளி அம்மாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் அருள்தரும் வள்ளி அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2024 6ஆம் திருநாள் :

ஆவணி – 13ம் தேதி
ஆகஸ்டு 29-08-2024 வியாழன் கிழமை

காலை
கோ ரதமும் அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து
பந்தல் மண்டபம் மத்தியில் சேர்தல் நடைபெறும்.

இரவு
அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் வெள்ளி ரதத்திலும் இந்திர விமானத்தில் அருள்தரும் வள்ளி அம்பாள் எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2024 7ஆம் திருநாள்

ஆவணி – 14ம் தேதி ஆகஸ்டு
30-08-2024 வெள்ளிக்கிழமை

அதிகாலை : 5:00 மணிக்கு
அருள்மிகு ஸ்ரீ ஷண்முகப்பெருமான்-க்கு #உருகுசட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.

காலை : 6:00 மணி
பல்லாக்கு வாகனத்தில் அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் சுவாமி, அம்பாள்
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல்
தொடா்ந்து காலை: 8.45 மணிக்கு சுவாமி #ஆறுமுகப்பெருமான் வெட்டிவோ் சப்பரத்தில் பக்தா்களுக்கு ஷண்முகர் ஏற்றம் தரிசனம் அருளி, பிள்ளையன் கட்டளை மண்டபத்தை அடைகிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார,தீபாராதனை நடைபெற்றதும், மாலை 4.30 மணிக்கு சுவாமி பெரிய தங்கச்சப்பரத்தில் சிவனின் அம்சமாக #சிவப்புசாத்தி எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2024 8ஆம் திருநாள்
ஆவணி – 15ம் தேதி
ஆகஸ்டு
31-08-2024 சனிக்கிழமை

எட்டாவது திருநாளில் வெள்ளைச்சாத்தி மண்டபத்தில் செந்தூர் சக்கரவர்த்தி ஷண்முகப் பெருமானுக்கு
சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்று

அதிகாலை 5:00 மணிக்குமேல்
பெரிய வெள்ளிச்சப்பரத்தில் படைக்கும் கடவுள் பிரம்மனின் அம்சமாக வெள்ளைசாத்தி எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சோ்ந்து பின்னர் 8ம் திருநாள் மண்டபத்தில்

காலை
ஷண்முகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். பகல்
பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி காக்கும் தெய்வமாகிய தாய்மாமன் மகாவிஷ்ணுவின் அம்சமாக #பச்சைசாத்தி எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் வந்து சோ்கிறாா்.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2024 9ஆம் திருநாள்
ஆவணி – 16ம் தேதி
செப்டம்பர்
01-09-2024 ஞாயிற்றுக்கிழமை

காலை வெள்ளிக்குதிரை வாகனத்தில் அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அலையுகந்தபெருமான் எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

மதியம்
பல்லாக்கு வாகனத்தில் அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

இரவு
அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் தங்க கயிலாயப் பர்வத வாகனத்திலும் வெள்ளி கமல வாகனத்தில் அருள்தரும் வள்ளி அம்பாள் எழுந்தருளி
எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2024 10ஆம் திருநாள் :

ஆவணி 17ம் தேதி
02-09-2024 திங்கள் கிழமை

காலை தேரோட்டம்
கோ ரதத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் சுவாமி பெரிய மரத்தேர்-ல் அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் சிறிய மரத்தேர்-ல் அருள்தரும் வள்ளி அம்பாள் நான்கு திருவீதிகளிலும் திருத்தேர் வடம் பிடித்து திரு வீதிகளில் வலம் வந்து சேர்தல்.

இரவு
பெரிய பல்லாக்கு வாகனத்தில் அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் சிறிய பல்லாக்கு வாகனத்தில் வள்ளி அம்பாள் எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல்.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2024 11ஆம் திருநாள்:

ஆவணி 18ம் தேதி
03-09-2024 செவ்வாய்க்கிழமை

இரவு
புஷ்ப சப்பரத்தில் அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் கேடயச் சப்பரத்தில் அருள்தரும் வள்ளி அம்பாள்
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 2024 12ஆம் திருநாள்:

ஆவணி 19ம் தேதி
04-09-2024 புதன்கிழமை மாலை
அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் புஷ்ப சப்பரத்திலும் கேடயச் சப்பரத்தில் அருள்தரும் வள்ளி அம்பாள்
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து 12ம் திருநாள் மண்டபத்தில் சேர்தல் நடைபெறும்.

இரவு
அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் மலர்கேடயச் சப்பரத்திலும் பெரியகேடயச் சப்பரத்தில் அருள்தரும் வள்ளி அம்பாள் எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் வந்தடைதல்.