முதல் முறை சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செவ்வாய் கிழமை போறவங்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ!
மூலவர்: பாலசுப்பிரமணியர்
பழமை: 500 வருடங்களுக்கு முன்
ஊர்: சிறுவாபுரி
கோயில்: ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது.
சிறுவர்களான லவ-குசா இருவரும் ராமருடன் போரிட்டு வெற்றி பெற்ற தலமாதலால் இந்த இடம்
சிறுவர்+அம்பு+எடு= சிறுவரம்பெடு (தற்போது சின்னம்பேடு என்றும், சிறுவை, சிறுவர்புரி, சிறுவாபுரி
என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
மயில் மேலேறிவந்து அருணகிரி நாதருக்கு முருக பெருமான் காட்சி கொடுத்த ,இத் தலத்துக்கு 4
திருப்புகழ் பாடல்கள் உள்ளன.
மூலவர் பாலசுப்பிரமணியர் 41/2 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இந்த சிறுவாபுரி ஆலயத்தில் உள்ள பிற சன்னதிகள், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், ஆதி
விநாயகர், நாகர், பைரவர், முனீஸ்வரர், அருணகிரிநாதர், உற்சவ மூர்த்தியாக திருமணக் கோலத்தில்
உள்ள வள்ளி -முருகன், நான்கு கரங்களுடன் ஆதி முருகப் பெருமான் மற்றும் சண்டிகேஸ்வரர்.
மூலவர் : பாலசுப்பிரமணியர்
ஊர் : சிறுவாபுரி, சின்னம்பேடு
மாவட்டம் : திருவள்ளூர்
முகவரி:
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
சிறுவாபுரி- 601206
திருவள்ளூர் மாவட்டம்.
போன்:
+91- 44 2471 2173, 9444280595, 9444171529