ஆடி அமாவாசை 2024 – கட்டாயம் செய்ய வேண்டிய கடமை | தர்ப்பணம் & படையல் போடும் நேரம் | Aadi Amavasai
ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாள். அந்த அமாவாசை தினத்தில் நாம் செய்யும் தர்ப்பணத்தால், முன்னோர்களின் ஆசி நாம் பெறலாம். ‘நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும், தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. இது அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு தொடங்கும் காரியங்கள் வெற்றியாகவே முடியும் என்பதைக் குறிப்பதாகும்.