சொந்த வீடு அமைய பாட வேண்டிய சிறுவாபுரி பதிகம்

சொந்த வீடு அமைய உதவும் சிறுவாபுரி பதிகம்! SIRUVAPURI Murugan PATHIGAM

சொந்த வீடு அமைய உதவும் சிறுவாபுரி பதிகம்! SIRUVAPURI Murugan PATHIGAM|சொந்த வீடு அமைய பாட வேண்டிய சிறுவாபுரி பதிகம்!

சிறுவாபுரி பதிகம் – சொந்த வீடு அமைய பாட வேண்டிய பாடல்

சிவனாரின் பிள்ளை கணநாத வள்ளல் திருப்பாதம் முந்தி தொழுது
புவியளாக் குன்றம் தனிலாடும் வேலன் புகழ் பாட நல்ல தமிழை
சுவையோடு தந்து நிறைவாகச் செய்ய துணையாக வேண்டும் எனவே
கவிபாடி வேண்டி கசிந்தேதுகின்றேன் கணநாதன் எந்தன் துணையே

 

கல்லாத பேர்க்கும் கவிபாடும் ஆற்றல் கடல்போல தந்து விடுவான்
வெல்லாத கோழை வெகுவீரனாக விதிமாற்றி வைத்து விடுவான்
நில்லாத செல்வம் நிலையாக இல்லில் நிதங்கூட வைத்துவிடுவான் செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே

எனக்காக இல்லம் இலையே என்றேங்க எழில்வீடு ஐயன் தருவான்
பணக்கரான் என்றும் பரதேசி என்றும் பார்த்தாள எண்ணி அறியான்
தனைக்காண வந்து தமிழ் பாடும் அன்பர் துணையாக என்றும் வருவான் தினை காட்டு வள்ளி தனை நாடும் வள்ளல் சிறுவாபுரி குமரனே

நெல்லோடு வாழை நிறைவாக சூடும் நிலமோங்கு நல்ல பதியாம்
வில்லேந்தும் ராமர் வைதேகி பாலர்
வென்றடி நின்ற இடமாம்
பொல்லாத சூரன் புரமோட்டி வேலன் பொழுதோடு தங்கும் இடமாம் செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே

தவமோங்கு தந்தை செவியோடி பேசிக் சதுர்வேதம் சொல்லி விடவே
சிவசாமி நீயும் தென்சாமி மலையில் திருவீடு கொள்ள விலையோ
புவிவாழும் யானும் புதுவீடு ஒன்றில் புகவேணும் நல்ல குடியே
சிவபால தேவன் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே

எட்டாத வானோர் எழிலான வீட்டில் எக்காள மிட்டுப்புகுந்து
கொட்டாடும் சூரன் குலநாசமாகக் கூர்வேலைத் தொட்ட குமரன்
தட்டாமல் தேவர் தன்வீடு தன்னில் தானாள விட்ட குமரன் செட்டாய் எனக்கும் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே

சூராதி சூரன் தூளாகிப் போக ஜெகமேவு தேவர் மகிழ்ந்து காராருங் கூந்தல் தெய்வானை தன்னைக்

கல்யாணம் செய்து தருவார் ஏராரும் வேலன்
இல்வாழ்க்கை காணும் இனிய பரங்குன்றம் எழிலாம் சீராய் எனக்கும் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே

குருயானை போன்ற கணநாத வள்ளல் ஒப்போடு அன்று உதவ
குறமாது தன்னை மணமாலை சூடிக்கொண்டாடும் இன்ப நினைவில்
தருமேவு நல்ல தணிகா சலத்தில் தனிவீடு கொண்ட குகனாம் சிறியேன் எனக்கும் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக்குமரனே

 

சிற காட வானில் பறந்தாடும் புள்ளும் சிறுகூடு கட்டி வளரும்
குறியாய்ப் பணத்தை கொள்ளாது விட்ட அறியாத பிள்ளை எனையும்
உறவோரும் என்றும் ஒப்போடு காண உடனோடி வந்து அருளி சிறியேன் எனக்கும் ஒருவீடு ஈவான்
சிறுவாபுரிக்குமரனே

ஏராள செல்வம் இருந்தாலும் எல்லாம் எல்லார்க்கும் வாய்ப்ப திலையே பாராளும் கந்தன் பார்த்தாலே
கிட்டும் பாராங்கும் உண்மை நிலையே ஊராரும் போற்றும் பேரோடு வாழ உடனோடி வந்து அருளி சீரான இல்லம் தோதாய் அருள்வான் சிறுவாபுரிக் குமரனே

மெய் பேச வாழ்வில் விளையாது துன்பம் விதி கூறும் உண்மை இதுவே பொய்பேசிச் செல்வம் புகழோடு யாரும் புவி வாழ்ந்த தென்றும் இலையே கையாற வேலன் கால்த்தேடி பற்றக் கவினாடும் இன்ப நிலையே தெய்வானை நாதன் ஒருவீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே

இப்பாடல் பத்தும் எப்போதும் பாட
எந்நாளும் இன்பம் மிகுமே
செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாற கேட்பின் நலமே
தப்பாது தேடும் தரமான வீடு
தனமாக வந்து விடுமே
அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே!