பெரும்பேடு முத்துக்குமார சுவாமி |Ponneri | Perumbedu | Muthukumaraswamy Temple History in Tamil
இந்த ஆலயம் சிறந்த பிரார்த்தனை மற்றும் பரிகார தலமாக விளங்குகிறது .திருமண வரம் வேண்டுபவர்கள் முருக பெருமானுக்கு மாலை அணிவித்து அர்ச்சனை செய்த பிறகு அந்த மாலையை அவர்கள் அணிந்து கொண்டு 3 முறை கோவிலை சுற்றி வலம் வரவேண்டும். இது போல 11 செவ்வாய் கிழமைகள் தொடர்ந்து முத்து குமாரசுவாமி முருகனை வழிபட்டால் ஒரு வருடத்திற்குள் திருமண பாக்கியம் நிச்சயம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், இந்த ஆலயத்தில் முத்து குமாரசுவாமி பிரம்ம சாஸ்தா வடிவில் அருள் புரிவதால், இவரை வழிபட கல்வி , கலைகள் ஆகியவற்றில் முன்னேற்றம் கிட்டும்.
செவ்வாய் கிரகத்தின் அதி தேவதை முருக பெருமான் ஆவார். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் மற்றும் செவ்வாய் குறைபாடு இருந்தால் முருகனை செவ்வாய் கிழமையன்று பிரார்த்தனை செய்து வழிபடுவது, செவ்வாய் பகவானின் வீரியத்தை குறைத்து அற்புதமான பலன்களை அளிக்கும்.
கோவில் அமைவிடம் :
பொன்னேரி வட்டம், பெரும்பேடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது . பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.