2024 சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரைத் தேரோட்டம் 2024

2024 LIVE சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரைத் தேரோட்டம் 2024

2024 LIVE சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரைத் தேரோட்டம் 2024

LIVE சக்தி தலங்களில் முதன்மை திருத்தலமான சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் நடைபெறும் சித்திரை திருத்தேர் பிரசித்தி பெற்றது. அன்று காலை அம்மன் திருக்கோயிலிலிருந்து கேடயத்தில் புறப்பட்டு திருத்தேருக்கு வந்து சேர்கிறார். பூ மற்றும் பல்வேறு அலங்காரங்களுடன் கூடிய திருத்தேரில் அம்மன் வீற்றிருக்க காலையில் திருத்தேர் வடம் பிடித்தல் இனிதே துவங்குகிறது.

பார்வதி மண்டபத்தின் கிழக்கில் இடப்புறம் தெற்குநோக்கி புறப்படும் திருத்தேர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். இத்தருணத்தில் பல இலட்சக்கணக்கான மக்கள் அம்மனின் அருளைப்பெற பல ஊர்களிலிருந்து அன்னையின் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டுச் செல்வர். மேலும் தெற்கு நோக்கிய திருத்தேர்பவனி, மேற்கு, வடக்கு, கிழக்கு என வீதிகளை கடந்து மீண்டும் திருக்கோயிலின் திருவீதி முன் திருத்தேர் நிலைக்கு வந்து சேரும்.