Biggest Kannapuram Kangeyam Nattive Cow Market / 1000 Years Old Nattive Desi cow Market
கண்ணபுரம் மாரியம்மன் சமயபுரம் மாரியம்மனின் தாய் இந்த கோவில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா முன்னிட்டு ஆண்டு தோறும் மாட்டு சந்தை கூடுவது வழக்கமாக உள்ளது. இந்த மாட்டு சந்தை மிகப் பெரியது 10 ஆயிரம் மாடுகளுக்கு மேல் விற்பனைக்கு வரும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கேரளா தெலுங்கானா. கர்நாடக, ம.பி.உபி உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்து பல ஆயிரம் விவசாயிகள் மாடு வங்க குவிவர்.இந்த சந்தையின் சிறப்பு நமது நாட்டின் பாரம்பரிய மாடான காங்கேயம் காளைகள் பசுக்கள், நாட்டு மாடுகள் மட்டும் விற்பனைக்கு வரும் ஜல்லிக்கட்டு மாடுகள் ஒரிஜினல் காங்கயம் காளைகள் இங்கு விற்பனை செய்யப்படும் 1000 ஆண்டுகளுக்கு முன் இந்த வழியாக வந்த சீன யாத்திரிகர் கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா முன்னிட்டு கூடும் இந்த மாட்டு சந்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் இந்த மாட்டு சந்தை குறித்து ஆவணங்கள் உள்ளன. தமிழர்கள் ஒவ்வொரு வரும் பார்த்து ரசித்து பெருமை அடையவேண்டும். இந்த மாட்டு சந்தை கூடும் இடம் கோவை திருச்சி நெடுஞ்சாலை 2000 ஆண்டு பழமையான இராஜகேசரி பெருவழி என்ற பெருமை உடைய பலங்கால சாலையாகும்.இந்த இராஜகேசரி பெருவழியில் மூவேந்தர்கள் சேரன்,சோழன்,பாண்டியன் ஆ்கியோர் பயனித்துல்லனர் என்ற வரலாற்று குறிப்புகள் உள்ளன. கட்டாயம் உங்கள் குடும்பத்தாரை அழைத்து வந்து இந்த கோவில் மற்றும் மாட்டு சந்தையை காட்டி தமிழன் பெருமையை எடுத்து கூறுங்கள். மேழிச் செல்வம் கோழைடாது.
தேதி: ஒவ்வொரு வருடமும் பங்குனி கடைசி யில் தொடங்கி சித்திரை முதல் வரைக்கும் இந்த மாட்டுச் சந்தை நடைபெறும்
இடம் : கண்ணபுரம்,காங்கேயம் – வெள்ளகோவில் ரோடு,திருப்பூர் மாவட்டம்.