Divya Desam Temples Kanchipuram |1 Day Tour| 108 திவ்யதேசங்கள் | Kanchipuram Temples | Divine kanchi
1.ஸ்தலம் ஶ்ரீ பவளவண்ணர் திருக்கோயில்.
அமைவிடம்.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையம் தாண்டி வந்ததும் இடது புறம் வரக்கூடிய காலாண்டர் தெருவில் அமைந்துள்ளது இந்த கோயில்.
நேரம்.காலை 7.30 to 11.30
மாலை. 4.30 to 7.30.
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். காலை. 7.30 to காலை.8.00
2.ஸ்தலம் ஶ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில்.
அமைவிடம்.
செங்கழுநீரோடை வீதி எனும் dr. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சாலை வழியாக வந்தால் பூக்கடை சத்திரம். அதிலிருந்து வலது புறம் திரும்பி கிழக்கு ராஜ வீதி சாலையில் வந்தால் இடது புறம் வருகின்ற தெரு வைகுண்ட பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ளது இந்த கோவில்.
நேரம். காலை 7.30 to 12.00
மாலை. 4.30 to 7.30
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். காலை. 8.15 to காலை.8.45
3. ஸ்தலம் ஶ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்.வைகுண்ட பெருமாள் சன்னதி தெருவிற்கு எதிரே உள்ள சங்குப்பாணி விநாயகர் கோயில் தெரு வழியாக வந்து வலது புறம் திரும்பினால் உள்ளது இந்த கோயில்.
நேரம்.காலை 7.00 to 12.00
மாலை. 4.00 to 8.00
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். காலை. 9.00 to காலை.9.30
4.ஸ்தலம் ஶ்ரீ கள்வப்பெருமாள் திருக்கோயில்.
அமைவிடம்.
உலகளந்த பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள உலக பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளது இந்த திவ்ய தேசம்.
நேரம். காலை 5.30 to 12.00
மாலை. 4.00 to 8.00
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். காலை. 9.45 to காலை.10.15
5. ஸ்தலம் ஶ்ரீ நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில்.
அமைவிடம்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ளது இந்த திவ்ய தேசம்.
நேரம். காலை 6.00 to 12.30,
மாலை. 4.00 to 8.30
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். காலை. 10.30 to காலை.11.00
6.ஸ்தலம் திருப்புட்குழி ஶ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோயில்.
அமைவிடம்.
காஞ்சிபுரத்தில் இருந்து ஒலிமுகமது பேட்டை வழியாக வேலூர் பைபாஸ் சாலையில் பயணித்தால் நமக்கு இடது புறமாக வரக்கூடியது திருப்புட்குழி எனும் ஊர்.காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 12 km. தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில்.
நேரம். காலை 7.00 to 12.00
மாலை. 4.00 to 7.00
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். காலை. 11.30 to காலை.12.00
7. ஸ்தலம் ஶ்ரீ பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில்
அமைவிடம்.
ஏகாம்பரநாதர் கோயிலுக்கு எதிரே உள்ள ஏகாம்பரநாதர் சன்னதி தெரு வழியாக வந்தால் வலது புறம் திரும்பினால் பாண்டவபெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ளது இந்த கோயில்.
நேரம். காலை 7.00 to 11.00
மாலை. 4.00 to 7.30
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். மாலை. 4.00 to மாலை.4.30
8. ஸ்தலம் ஶ்ரீ விளக்கொளி பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து உத்திர மேருர் செல்லும் சாலையில் கீரை மண்டபம் தேசிகர் சன்னதி தெருவில் அமைந்துள்ளது இந்த கோவில்.
நேரம். காலை. 8.30 to 11.30
மாலை. 5.30 to 7.30
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். மாலை. 4.45 to மாலை.5.15
9. ஸ்தலம் ஶ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்.
விளக்கொளி பெருமாள் கோவிலுக்கு அருகில் விளக்கடி கோவில் தெருவில் வந்து வலது புறம் திரும்பினால் சிங்க பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது இந்த கோவில்.
நேரம். காலை. 6.00 to 11.00
மாலை. 4.00 to 7.30
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். மாலை. 5.30 to மாலை.6.00
10. ஸ்தலம் ஶ்ரீ அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்.
அழகிய சிங்க பெருமாள் கோவிலிலிருந்து விளக்கடி கோயில் தெரு வழியாக வந்தால் ரங்கசாமி குளம் அருகில் அமைந்துள்ளது இந்த கோவில்.
நேரம். காலை. 6.30 to 12.00
மாலை. 4.00 to 8.00
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். மாலை. 6.15 to மாலை.6.45
11. ஸ்தலம் ஶ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்.
அஷ்ட புஜம் கோயிலுக்கு எதிரே உள்ள தெருவில் அமைந்துள்ளது இந்த கோயில்.
நேரம். காலை. 7.30 to 11.30
மாலை. 5.30 to இரவு 7.30
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம்.
இரவு. 7.00 to இரவு.7.30
12. ஸ்தலம் ஶ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்.
யதோக்தகாரி கோவிலில் இருந்து T.K நம்பி தெரு வழியாக வந்தால்
சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது இந்த உலக பிரசித்தி பெற்ற இந்த கோவில்.
நேரம். காலை.7.30 to 12.30
மாலை. 3.30 to இரவு 8.00
நீங்கள் தரிசிக்க வேண்டிய நேரம். இரவு. 7.45 to இரவு.8.00