புகழ்பெற்ற தமிழக கோவில் பிரசாதங்களை வீட்டில் இருந்து பெறுவது எப்படி

புகழ்பெற்ற தமிழக கோயில் பிரசாதங்களை வீட்டில் இருந்து பெறுவது எப்படி?

புகழ்பெற்ற தமிழக கோயில் பிரசாதங்களை வீட்டில் இருந்து பெறுவது எப்படி?

புகழ்பெற்ற தமிழக கோவில் பிரசாதங்களை வீட்டில் இருந்து பெறுவது எப்படி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, அஞ்சல் துறை இணைந்து வெப்சைட் மூலம் முன்பதிவு செய்யும் கோயில் பிரசாதங்களை அஞ்சல் மூலம் நம் வீட்டுக்கே அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள 49 புகழ்பெற்ற கோயில்களின் பிரசாதத்தை, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வமான இணையதளமான www.hrce.tn.gov.in மூலமாகவோ அல்லது ‘திருக்கோயில்’ என்னும் மொபைல் ஆப் மூலமாகவோ பக்தர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

இதன்மூலம் பக்தர்கள் தங்களுக்கு எந்தக் கோவிலின் பிரசாதம் தேவை, உங்கள் முகவரி, தேவையான அளவு மற்றும் மற்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், தபால் துறையினர் கோவில் அதிகாரிகளிடம் இருந்து கோயில் பிரசாதத்தைப் பெற்று, ஸ்பீட் போஸ்ட்டில் பாதுகாக்கப்பட்ட உறைகளில் பக்தர்களின் வீட்டு வாசலிலேயே வழங்குவார்கள்.

அஞ்சலில் பிரசாதம் கிடைக்கும் கோயில்களின் பட்டியல்:

1 அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை – 600004

2 அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை – 600005

3 அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை – 600026

4 அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை – 600019

5 அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர், சோளிங்கர் – 631102

6 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், திருத்தணி – 631209

7 அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு – 600077

8 அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு, சென்னை – 600122

9 அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில், சின்ன காஞ்சிபுரம் – 631501

10 அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில், மேட்டு அக்ரஹாரம், சேலம் – 636001

11 அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல் பேருந்து நிலையம் அருகில், நாமக்கல் – 637001

12 அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், மலைக்கோயில், திருச்செங்கோடு – 637211

13 அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேவி கோட்டம், தேக்கம்பட்டி – 641305

14 அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை – 642104

15 அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில், பேரூர் – 641010

16 அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி – 641021

17 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை – 641046

18 அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில், வி.அய்யம்பாளையம், வி.அய்யம்பாளையம், சாமளாபுரம், திருப்பூர் – 641663

19 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயம், சிவன்மலை – 638701

20 அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு – 638301

21 அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி – 638401

22 அருள்மிகு பிரகதீஸ்வரசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் – 613009

23 அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர் – 613501

24 அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரஸ்வாமி திருக்கோயில், ஆலங்குடி – 612801

25 அருள்மிகு வேங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருநாகேஸ்வரம், கும்பகோணம் வட்டம் – 612204

26 அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம், திருநாகேஸ்வரம் – 612204

27 அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, கும்பகோணம் – 612302

28 அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர், மேல்மலையனூர் – 604204

29 அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை – 606601

30 அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர் – 639005

31 அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் – 620006

32 அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், சமயபுரம் – 621112

33 அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி – 620002

34 அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி – 620005

35 அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி – 620003

36 அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை, மதுரை – 625001

37 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் – 625005

38 அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை – 625001

39 அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில் – 625301

40 அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில் – 625301

41 அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி – 624601

42 அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் – 623526

43 அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி – 626202

44 அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோயில், மடப்புரம் – 630611

45 அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி – 627807

46 அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம், தென்காசி – 627802

47 அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், சங்கரன்கோயில் – 627756

48 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் – 628215

49 அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம் – 629704