திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2024 – ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி? tiruvannamalai karthigai deepam ticket booking 2024
2024 திருவண்ணாமலை திருக்கோயில் கார்த்திகை தீபம் தரிசன முன்பதிவு செய்ய விதிமுறைகள்
மற்றும் நிபந்தனைகள்:
1.மகா தீபத்திற்கு பிற்பகல் 02.00 மணி முதல் 4.00 மணி வரையில் மட்டுமே வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் உள்ள, ஏபிடி பார்சல் சர்வீஸ், பெரிய தெரு வழியாக அனுமதிக்கப்பட்டு இராஜ கோபுரத்தின் அருகே உள்ள திட்டி வாயில் வழியாக அனுப்பப்படுவர்.
2.நுழைவு நேரத்தில், அனைத்து பக்தர்களும் முன்பதிவின் போது பயன்படுத்திய அதே அசல் அடையாள சான்றுடன் முன்பதிவு இரசீதினை எடுத்துவரவேண்டும்.
3.தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எந்தவித லக்கேஜ், எலக்ட்ரானிக் உபகரணங்கள் திருக்கோயிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
4.முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் முறையான சரிபார்ப்புக்குப் பின்னரே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படும், மேலும், டிக்கெட்டுகளில் ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
5.சிறப்புச் சூழ்நிலைகளில் தரிசனத்தை ரத்து செய்யும் உரிமை திருக்கோயிலுக்கு உண்டு.
6.ஏதேனும் சந்தேகங்களுக்கு, தயவுசெய்து எங்கள் உதவி மையத்தை எண். 04175 252438, அலைபேசி
எண். 77086 49129, கட்டணமில்லா சேவை எண். 1800 4253 657 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
For any quries, please contact: 04428339999